sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் கொள்ளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை

மணல் கொள்ளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை

மணல் கொள்ளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை


ADDED : ஜூலை 12, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக, சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாகூர் தென்பெண்ணையாறு, நெட்டப்பாக்கம் மலட்டாறு பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. ஆற்று படுகையையொட்டி உள்ள விளை நிலங்களில் இருந்தும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பாதிக்கின்றனர். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,வில்லியனுார் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தில்மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் சோம சேகர் அப்பால் கொட்டாரு தலைமை தாங்கினார். பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள ஆற்று படுகை மற்றும் வயல்வெளி பகுதியில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுப்பது, மணல் கொள்ளையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us