/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : செப் 17, 2024 04:21 AM
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் கிராமத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பால்வினை நோய் குறித்த இரண்டு மாதம் தீவிர விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள 180 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் கல்லுாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.