தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எய்ட்சா.... ஓட்டம் பிடிக்கும் டாக்டர்கள் நோயை கண்டல்ல... ஊழலை கண்டு

எய்ட்சா.... ஓட்டம் பிடிக்கும் டாக்டர்கள் நோயை கண்டல்ல... ஊழலை கண்டு

எய்ட்சா.... ஓட்டம் பிடிக்கும் டாக்டர்கள் நோயை கண்டல்ல... ஊழலை கண்டு


ADDED : ஜூலை 18, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில், எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. சுகாதாரத்துறையில் இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள டாக்டர் இச்சங்கத்தின் திட்ட இயக்குநராக பொறுப்பு வரும் அதிகாரிகள், தங்கள் பதவி காலம் 3 ஆண்டாக இருந்த போதிலும், சமீப காலமாக பதவிக்கு வந்த ஓரிரு மாதங்களில் பிற துறைகளுக்கு மாற்றலாகி சென்றனர். இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பினர்.

இந்நிலையில் கடந்தாண்டு இப்பதவிக்கு வந்த திட்ட இயக்குநர், சங்கத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சுகாதாரத்துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்தார்.

இதனால், சங்கத்தில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்த நிலையில், , முறைகேட்டை கண்டறிந்த திட்ட இயக்குநர், அதிரடியாக அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியாக மாற்றப்பட்டார்.

திட்ட இயக்குநர் பதவிக்கு வேறு ஒரு டாக்டரை நியமிக்கப்பட்டார். ஆனால், அவரோ எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் நடக்கும் உள்குத்து அரசியலை நன்குணர்ந்த அந்த டாக்டரோ, எனக்கு வேலையே வேண்டாம் என விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு, விட்டா போதும் என ஓட்டம் பிடித்துவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us