தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரவுடி மீது குண்டாஸ் கலெக்டர் உத்தரவு

ரவுடி மீது குண்டாஸ் கலெக்டர் உத்தரவு

ரவுடி மீது குண்டாஸ் கலெக்டர் உத்தரவு


ADDED : ஜூலை 18, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி பழனிமுருகனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை, செல்லபெருமாள்பேட், ஊத்துகாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பக்தவசலம் மகன் சுல்லான் (எ) பழனிமுருகன், 23; பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, 2 அடிதடி, வழிபறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

தற்போது, லாஸ்பேட்டையில் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பான முன்விரோதத்தில், கடந்த மே மாதம், நெருப்புக்குழி மைதானத்தில் கொத்தனாரை கத்தியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரவுடி சுல்லானை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், சிறையில் உள்ள ரவுடி பழனிமுருகன் வெளியே வந்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளதால், சிறையில் இருக்கும் அவர், வெளியே வராதபடி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். 

இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், ரவுடி சுல்லான் மீது கடந்த 17ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us