ஏ.ஐ.டி.யூ.சி., சண்டே மார்க்கெட் தொழிலாளர் சங்க கூட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி., சண்டே மார்க்கெட் தொழிலாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 18, 2026 10:21 PM
புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., சண்டே மார்க்கெட் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் டோனி தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி சங்க செயல்பாடுகள் 2026 உறுப்பினர் சந்தா குறித்து பேசினார். பொருளாளர் சங்கர் வரவு செலவு தாக்கல் செய்தார். கூட்டத்தில் கவுரவ தலைவர்கள் பாபு, இக்பால், செயல் தலைவர் கார்த்திகேயன் நிர்வாகிகள் முகமது அலி, சரவணன், விஜயலட்சுமி செந்தில், தண்டபாணி, கோவிந்தராஜ், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி சண்டே மார்கெட்டில் வியாபாரம் செய்யும் சண்டே மார்க்கெட் தொழிலாளர்களும், பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலினால் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் சண்டே மார்க்கெட் செயல்படும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், பேரிகாடுகள் அமைத்து மூன்று சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதை தடுத்திட வேண்டும்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில அசம்பாவித செயல்களில் சிலர் ஈடுபடுவதை தடுத்திட காவல்துறை மாலை நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும். கடந்த காலங்களை போலவே சண்டே மார்க்கெட் பகுதி வியாபாரிகளிடம் அடிக்காசு வசூல் செய்வதை நகராட்சி நிர்வாகமே செய்திட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
