தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேன் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

 வேன் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

 வேன் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி


ADDED : ஜூன் 19, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சொக்கநாதன்பேட்டை, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் இதயகிரி, 32; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முனதினம் கம்பெனியில் இரவு பணிக்கு சென்ற இதயகிரி, பணி முடிந்து நேற்று காலை 7 மணிக்கு பைக்கில் (பி.ஒய் 01 யு 2140) வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

மேட்டுப்பாளையம், கனரக வாகன முனையம் அருகே வந்தபோது, சாலையின் நடுவே இருந்த வேகத்தடையில் பைக்கில் மெதுவாக ஏறியுள்ளார். அவரது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் கும்பை அள்ளும் மினி வேன், பைக் மீது மோதியுடன், இதயகிரியை 50 மீட்டர் தொலைவுக்கு சாலையில் இழுத்து சென்றுள்ளது. இதையடுத்து, மினி வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்தில் பலத்த காயமடைந்த இதயகிரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர், நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த இதயகிரிக்கு, 5 மாத கர்ப்பணியான நிவேதா என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us