தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்;

அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்;

அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்;


ADDED : ஆக 08, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிற்கு இருமுறை எக்ஸ்போ நடத்தலாம்

மக்கள் நல்ல பொருட்களை வாங்குவதற்கு சிறந்த இடமாக ‘தினமலர்’ எக்ஸ்போ அமைந்துள்ளது. மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இல்லத்தரசிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும், ஒரே இடத்தில் இங்கு கிடைக்கிறது.

புதுச்சேரியில் பொழுதுபோக்கு இல்லாத சூழ்நிலையில், ‘தினமலர்’ எக்ஸ்போ தேவையான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டு சிறப்பாகவே நடத்தி வருகின்றனர். இந்த எக்ஸ்போவை இனி வரும் காலங்களில் ஆண்டிற்கு இருமுறை நடத்தினாலும், நன்றாக இருக்கும்.

சிவா, தி.மு.க., புதுச்சேரி மாநில அமைப்பாளர்.

மக்களை கவர்ந்த தினமலர்

‘தினமலர்’ எக்ஸ்போ எப்போது நடக்கும் என பெண்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். தினமலர் எக்ஸ்போவிற்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். எங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் அதிகளவில் தினமலர் எக்ஸ்போவில் வாங்கியது தான். மக்களின் தேவைகள் அறிந்து ஸ்டால்கள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புது புது பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. வாகன பார்க்கிங் வசதி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரு, எம்.எல்.ஏ., புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us