/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒட்டுமொத்த பி.சி.எஸ்., அதிகாரிகள் முதல்வர் வீட்டிற்கு படையெடுப்பு
/
ஒட்டுமொத்த பி.சி.எஸ்., அதிகாரிகள் முதல்வர் வீட்டிற்கு படையெடுப்பு
ஒட்டுமொத்த பி.சி.எஸ்., அதிகாரிகள் முதல்வர் வீட்டிற்கு படையெடுப்பு
ஒட்டுமொத்த பி.சி.எஸ்., அதிகாரிகள் முதல்வர் வீட்டிற்கு படையெடுப்பு
ADDED : ஆக 21, 2024 08:18 AM

புதுச்சேரி : சமூக அமைப்புகளின் ஒப்பாரி போராட்டம் எதிரொலியால் ஒட்டுமொத்த பி.சி.எஸ்., அதிகாரிகளும், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பாதுகாப்பு கேட்டு முறையிட்டனர்.
புதுச்சேரியில் அரசு சான்றிதழ் பெறாத குரூப் - பி பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து சமூக அமைப்புகள் சார்பு செயலர்கள் வீடுகள் முன்பு ஒப்பாரி போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஒட்டுமொத்த பி.சி.எஸ்., (புதுச்சேரி குடிமை பணி) அதிகாரிகளும் நேற்று மாலை தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மைய கூடத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, திலாஸ்பேட்டையில் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் அனைவரும் சந்தித்து முறையிட்டனர்.
ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதை எதிர்க்கவில்லை. ஆனால், தனிப்பட்ட அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு அச்சுறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதால் மன உலைச்சல் ஏற்படுகிறது.
தங்களுக்கும், குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்டறிந்த முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு என்பது கவர்னர், முதல்வர், சட்டசபையை உள்ளடக்கியது. கடந்த காலங்களில் அதிகாரிகள் எடுத்த முடிவுகள் அரசு மாற்றி அமைத்துள்ளது.
எனவே, சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் முறையிடலாம். அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது சரியல்ல. இது தொடர்பாக போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, பி.சி.எஸ்., அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

