/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூடுதல் விலைக்கு உரம் விற்பதாக குற்றச்சாட்டு
/
கூடுதல் விலைக்கு உரம் விற்பதாக குற்றச்சாட்டு
ADDED : மே 03, 2024 06:27 AM
பாகூர் : புதுச்சேரியில் உரம் விற்பனையை முறைப்படுத்திட வேண்டும் என, பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரியில் நவரை பருவ நெல் சாகுபடியில், தற்போது களை எடுக்கப்பட்டு உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள், விற்பனை விலையை விட கூடுதலாக பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உரக்கடைகளில் இருப்பு மற்றும் விலை பட்டியல் வைக்கப்படுவது கிடையாது. இவற்றை கண்டு கொள்ளாமல் வேளாண் அதிகாரிகள் கோமா நிலையில் உள்ளனர்.
உரம் விற்பனையை முறைப்படுத்திடவும், நவரை பருவத்திற்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் தட்டுபாடின்றி கிடைத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, உயிர் உரங்கள், மண்புழு எரு, சூடோமோனாஸ், டிரக்கோடெர்மா, வேப்பம் புண்ணாக்கு, நுண் உரங்களை வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, விவசாய திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.