sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அருகி வரும் தேனீ இனத்தை மீட்டெடுக்க அலையன்ஸ் பிரான்ஸ்சே புது முயற்சி

/

அருகி வரும் தேனீ இனத்தை மீட்டெடுக்க அலையன்ஸ் பிரான்ஸ்சே புது முயற்சி

அருகி வரும் தேனீ இனத்தை மீட்டெடுக்க அலையன்ஸ் பிரான்ஸ்சே புது முயற்சி

அருகி வரும் தேனீ இனத்தை மீட்டெடுக்க அலையன்ஸ் பிரான்ஸ்சே புது முயற்சி


ADDED : ஜூன் 02, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருகி வரும் தேனி இனத்தை மீட்டெடுக்கவும், மாணவர்களிடையே இயற்கை சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்ஸ்சே கல்வி நிறுவனத்தில் தேனி வளர்க்கப்பட்டு வருகிறது.

ஈ இனத்தைச் சேர்ந்த ஏழு தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. இதில் பல தேனி இனங்கள் நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வேகமாக அழிந்து வருகிறது.

இந்நிலையில் அலையான்ஸ் பிரான்ஸ்சேவில் நடந்த ஒரு கருத்தரங்கில் தேனி இனத்தில் சிறிய வகை தேனியான 'டெட்ராகோனுலா இரிடிபென்னிஸ்' எனும் விஷம் இல்லாத இனம் வேகமாக குறைந்து வருவதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த தேனி இனத்தை மீட்டெடுக்கவும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி ஒயிட் டவுன் சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையான்ஸ் பிரான்ஸ்சே பிரெஞ்சு கல்வி நிறுவன இயக்குநர் லாரான்ட் ஜாலிகூஸ் தங்களது கல்லுாரி வளாகத்தில் மா, நாவல் மரம் மற்றும் பூச்செடிகள் அமைந்துள்ள பசுமையான சூழலில் 'டெட்ராகோனுலா இரிடிபென்னிஸ்' தேனீ இனத்தை வளர்ப்பதற்காக இரண்டு தேனீ பெட்டிகள் அமைத்துள்ளார்.

இதற்காக மலைப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு தேனடைகள் இந்த பெட்டிகளில் வைக்கப்பட்டு தேனீக்கள் இனப்பெருக்கம் செய்து வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த தேனீக்கள் 300 கிராம் முதல் ஒரு கிலோ வரை தேன் உற்பத்தி செய்யும். இதன் தேன் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

மேலும் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் ஒரு விளக்க பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு முறை செயல் விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி கல்லுாரி வளாகத்தில் பறவைகளுக்காக மரக்கூடு, செயற்கை சிட்டுக்குருவி கூடு ஆகியவை அமைக்கப்பட்டு பறவைகளுக்கு திணை தீவனம் வைக்கப்பட்டு வருகிறது.

இது போன்று தேனீ வளர்ப்பு இந்தியாவில் உள்ள 15 அலையான்ஸ் பிரான்ஸ்சே பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டும் என, தலைமை அலுவலகத்திற்கு இயக்குனர் லாரான்ட் ஜாலிகூஸ் பரிந்துரைத்துள்ளார.






      Dinamalar
      Follow us