
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள, திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் வக்கீல் குமரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முரளி, அன்பரசு, மோகனசுந்தரம், கோவில் அறங்காவலர் குணப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை, காமாட்சி அம்மன் கோவில் வீதி மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி இளைஞர்கள் செய்திருந்தனர்.