/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
/
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை
ADDED : மே 15, 2024 12:55 AM

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, ஆல்பா கல்விக் குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டினார்.
புதுச்சேரி அடுத்த பாகூரில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி நிவாஷினி 460 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மாணவி மகாலட்சுமி 452 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவர் காவியநாதன் 440 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
சாதித்த மாணவ மாணவிகளை, ஆல்பா கல்விக் குழுமங்களின் இயக்குனர் தனதியாகு சால்வை அணவித்தும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினார்.
ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆல்பா கல்விக் குழுமங்களின் இயக்குனர் தனதியாகு கூறும்போது, 'பாகூரில் உள்ள ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டுள்ளது.
தரமான கல்வி, ஒழுக்கம், உயர்ந்த லட்சியத்தை இலக்காக கொண்டுள்ள எங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்த்து பயன் அடையலாம்' என்றார்.

