/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
/
ஆல்பா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
ஆல்பா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
ஆல்பா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
ADDED : ஏப் 09, 2024 05:08 AM

புதுச்சேரி: ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உருளையன்பேட்டை, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா, நேற்று மாலை நடந்தது. இந்த விழாவை, ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி, துணை இயக்குநர்கள் ராஜலட்சுமி மற்றும் நந்தினி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் சேர்மன் பாஷிங்கம் வரவேற்றார். புதுச்சேரி 'லேட்டல்யே டிசைன்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சில்வெய்ன் சிறப்புரை ஆற்றி, மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த விழாவில் ஆல்பா ஆர்த்தோ கிளினிக் இயக்குநர் நவீன் தியாகு, முன்னாள் ஆல்பா பள்ளி மாணவியும், மருத்துவ அலுவலருமான டாக்டர் விஜய வினோதினி கலந்து கொண்டனர். மேலும் இருவரும், பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், நீட் தேர்வில் முதலிடம் பெற்று, பல்வேறு மருத்துவ பிரிவில் இடம் பெற்றவர்கள் மற்றும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையார்களை கவர்ந்தது. கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு நன்றி கூறினார்.

