/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச் சாவடியில் மயங்கி விழுந்த முதியவர்
/
ஓட்டுச் சாவடியில் மயங்கி விழுந்த முதியவர்
ADDED : ஏப் 20, 2024 05:44 AM

பாகூர், : கிருமாம்பாக்கம் அருகே ஓட்டுச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்ததால், பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மையத்தில் ஓட்டுப் பதிவு நடந்து கொண்டிருந்தது.
கந்தன்பேட் கிராமத்தை சேர்ந்த ராயல், 65, என்பவர், ஓட்டு போட வந்திருந்தார். வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்ட அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்த சுயேச்சை வேட்பாளர் ராமதாஸ், தான் வந்த காரில் முதியவர் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உதவினார்.
ஓட்டுச் சாவடியில் மயங்கி விழுந்து காயமடைந்த முதியவருக்கு உதவிய சுயேச்சை வேட்பாளர் ராமதாஸ் உதவியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

