/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆனந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
ஆனந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 16, 2024 05:07 AM

வில்லியனுார்: அரியூர் அடுத்த ஆனந்த புரம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக நடந்தது.
கும்பாபிேஷக விழா கடந்த 13ம் தேதி மாலை 5:00 மணி அளவில் வாஸ்து சாந்தி யாக சாலை பிரவேசமும், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 14ம் தேதி காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூலவர் பிரதிஷ்டையும் நடந்தது. மாலை 6:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், அஷ்ட பந்தன சாற்றுதல் மற் றும் தீபாரதனையும் நடந்தது.
நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 7:00 மணியளவில் கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 8:00 மணியளவில் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகமும், காலை 10:45 மணியளவில் ஆனந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் தீபாரதனையும்நடந்தது.
விழாவில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமார், முன்னாள் சேர்மன் பாலமுருகன், மோகித் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்