/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து என ஏமாற்றும் தேசிய கட்சிகள் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
மாநில அந்தஸ்து என ஏமாற்றும் தேசிய கட்சிகள் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து என ஏமாற்றும் தேசிய கட்சிகள் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து என ஏமாற்றும் தேசிய கட்சிகள் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 07, 2024 04:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, முத்தியால்பேட்டை தொகுதியில், அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
காங்., மற்றும் பா.ஜ.,ஆட்சியில் இருக்கும் போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், வெற்றி பெற்றால் செய்வோம் என, இரு கட்சிகளும் உத்தரவாதம் அளிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
காங்., தேர்தல் அறிக்கையில் மத்திய பா.ஜ., அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் சம்பந்தமாக எதுவும் இல்லை. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., காங்., கட்சிகள் சிறுபான்மையினர் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிகிறது.
இந்த லோக்சபா தேர்தலில், வினோதமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டசபை தேர்தலில், எதிரும் புதிருமாக போட்டியிட்ட பலர், இன்று ஒன்று சேர்ந்து காங்., மற்றும் பா.ஜ.,விற்கு தேர்தல் பணி செய்து,மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில், வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு இந்த அரசின் மூலம் நீதி கிடைக்கவில்லை. முதல்வர் அறிவித்த உதவி தொகையும் கிடைக்கவில்லை.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கோடு, காங்., முக்கிய நிர்வாகிகள் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட நபர்களை காங்., தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டு போதைப் பொருள் விற்பனையை ஏன் தடுக்கவில்லை என கேட்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் பேசினார்.

