/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை அன்பழகன் வலியுறுத்தல்
/
அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை அன்பழகன் வலியுறுத்தல்
அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை அன்பழகன் வலியுறுத்தல்
அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2024 05:08 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் விதிமீறல் பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் திறந்த வெளியில் பேனர் வைக்க கூடாது என்ற சட்டம் உள்ளது.
தற்போது புதுச்சேரியில் உள்ள தலைமை நீதிபதி இது சம்பந்தமாக அனைத்து விதி மீறல்களையும் நேரடியாக பார்த்து, சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு கடந்த, 7ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், 'இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அனைத்து அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.
இதில் கவர்னர் நேரடியாக தலையிட்டு தலைமை நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல அரசு ஊழியர்கள் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், சினிமா நடிகர்களுக்கு பேனர் வைப்பது ஒழுங்கீனமானது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் புதுச்சேரி பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் சென்று போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, உப்பளம் தொகுதி செயலாளர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

