ADDED : ஜூலை 10, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி பெரியபேட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் வில்லியனூர் தொகுதி பெரியப்பேட்டில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அங்கன்வாடி மைய ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள், அங்கன்வாடி மைய ஆசிரியர் ரோஷன் ரிஷ்பான், உதவியாளர் கவுரி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டரன்.
