ADDED : ஜூலை 10, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் இளமுருகு தலைமையிலான போலீசார் ஏம்பலம் பகுதியில் ரோந்து சென்றனர். மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளி எதிரில் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடையில் சோதனை செய்ததில், ஹான்ஸ் 44 பாக்கெட், கூலிப் 17, மவுத்ஜெல் 25, புகையிலை 240 பாக்கெட், விமல் பான்மசாலா 390 பாக்கெட் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த வசந்தா, 80, என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
