/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதலித்த பெண் திருமணமாகி சென்றதால் ஆத்திரம்: போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது

ADDED : ஜூலை 03, 2024 02:59 AM
விழுப்புரம் : காதலித்த பெண்ணுடன் கூடிய புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசு மகன் வல்லரசு,21; இவர், விழுப்புரம் அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த 21 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதனை அறிந்த வல்லரசு, பெண்ணுடன் கூடிய போட்டோவை பெண்ணின் கணவரின் வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பியுள்ளார். இதனால், அந்த பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில் வல்லரசு, பெண்ணுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை போஸ்டர் அடித்து பெண்ணின் வீட்டின் பகுதியில் ஒட்டினார். அதனை கண்டித்த பெண்ணை, வல்லரசு திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார், வன்கொடுமை தடுப்பு பிரிவு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து வல்லரசுவை நேற்று கைது செய்தனர்.