/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவர் இடிந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,கோரிக்கை

ADDED : ஏப் 02, 2024 04:05 AM
புதுச்சேரி : சுவர் இடித்து விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி வசந்தம் நகரில் வாய்க்கால் துார்வாரும் பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் இறந்தது வேதனைக்குரியது.கூலி வேலைக்காக வந்த அவர்கள், உயிர் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இறந்துள்ளதை அரசு உணர வேண்டும்.இறந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் புதுச்சேரியில் இறப்பு நிகழ்ந்துள்ளதால், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசும், கவர்னரும்இரங்கல் தெரிவித்தால் மட்டும் போதாது. அவர்களின் குடும்பத்திற்கு போதிய நிவாரணங்களையும் வழங்க வேண்டும்.
தேர்தலைக் காரணம் காட்டி இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் உதவிகள் வழங்காமல் இருப்பது சரியான செயல் இல்லை. ஆகையால், தேர்தல் ஆணையத்திடம் கவர்னர், முதல்வர் பேசி, சிறப்பு அனுமதிப் பெற்று போர்க்கால அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.