ADDED : ஜூன் 19, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா திடல் பகுதியில் உள்ள கடைகளின் சாவிகளை, தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகளிடம், முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதி அண்ணா விளையாட்டு திடல் சாலையோரம் உள்ள கடைகளுக்கான ஆணைகள் கடந்த தேர்தலுக்கு முன். ஏற்கனவே அங்கு கடை நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த கடைகளின் சாவிகளை, வியாபரிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது.
சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிக்கு நேரு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி, சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், வருவாய் அதிகாரிகள் பிரபாகரன், சிவாஇளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் உடனிருந்தனர்.
