ADDED : ஜூன் 19, 2026 06:20 PM
காரைக்கால்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால், நிரவி, கருக்களாச்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் வீரம்மாள்,70. வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், கடந்த 2013ம் ஆண்டு வீட்டில் மரம்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்,57; மற்றும் விஜயன் (எ) சந்திரபாலா 45 ஆகியோர், மூதாட்டியை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில், போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
