/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
அண்ணாதுரை பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
அண்ணாதுரை பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
ADDED : செப் 16, 2024 04:54 AM

புதுச்சேரி, : அண்ணாத்துரை பிறந்த நாளையொட்டி அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில் அண்ணாத்துரை பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாத்துரை சிலைக்கு, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ., பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.,
எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் சுதேசி மில்லில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்து அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். , அவை தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சன்குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.
மாநில செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர் தலைமையில், உப்பளம் தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாத்துரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் ஊர்வலமாக சென் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாதுரை சிலைக்கு, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஒதியஞ்சாலை அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, விஜயலட்சுமி, சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிகட்சி
மாநில தலைவர் பொன்னரங்கம் தலைமையில், கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராம காமராஜ், நடராஜன், தேவநாதன், ராஜேந்திரன், இளங்கோ உள்ளிட்டோர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.