/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சார் பதிவாளரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
சார் பதிவாளரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : மே 19, 2024 04:44 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே சார் பதிவாளரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர்; சார் பதிவாளர். திருக்கனுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். கடந்த 10ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு திருக்கனுாரில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழுதாவூர் அடுத்த கூனிமுடக்கு பகுதியில் வந்தபோது பின்னால் ஒரு பைக்கில் முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள், அவர் பைக் மீது மோதினர்.
கீழே விழுந்த பாஸ்கரை தாக்கி, அவர் பைக்கில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற பையில் நீதிமன்றம் சம்மந்தமான ஆவணங்கள் மற்றும் சில பத்திரங்களும் வைத்திருந்தார்.
இதுதொடர்பாக பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் ஆறு பேர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பத்திர எழுத்தாளர் தேங்காய்திட்டு மணிகண்டன், சுபாஷ், அனிஷ் ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மூவரை தேடி வந்தனர். வில்லியனுார், சாமியார்தோப்பை சேர்ந்த பெருமாள் மகன் சேகர், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.
மேலும், கரிக்கலாம்பாக்கம் சுரேஷ், துத்திப்பட்டு பிலோமின்தாஸ் ஆகியோரை தேடி வரு கின்றனர்.

