/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதிய ஆட்கள் இல்லாமல் தடுமாறும் போதை தடுப்பு பிரிவு
/
போதிய ஆட்கள் இல்லாமல் தடுமாறும் போதை தடுப்பு பிரிவு
போதிய ஆட்கள் இல்லாமல் தடுமாறும் போதை தடுப்பு பிரிவு
போதிய ஆட்கள் இல்லாமல் தடுமாறும் போதை தடுப்பு பிரிவு
ADDED : மார் 30, 2024 06:41 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில காவல் துறையில் போதை தடுப்பு பிரிவில் போதிய ஆட்கள் இல்லாமல் தடுமாறி வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக புதுச்சேரி மாநிலம் திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளனர்
அதே வேலையில் கடந்த பத்து ஆண்டுகளில் புதுச்சேரியில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.மொத்தம் 480 வழக்குகள் போடப்பட்டு 527.02 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய போதை தடுப்பு பிரிவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.
இது ஒருபக்கம் இருக்க,போதை தடுப்பு பிரிவு போதிய காவலர்கள் இல்லாமல் தடுமாறி வருகின்றது.22 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 6 பேர் இருக்கின்றனர்.16 பேர் மாற்றலாகி சென்றுவிட்டனர்.இந்த 6 பேரால் புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் போதை பொருட்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை கொடி பறக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் உள்ளூர் போலீசார் மீது நம்பிக்கை இல்லாமல் போதை தடுப்பு பிரிவிற்கு தகவல் கொடுக்கின்றனர். ஆனால்,போதை தடுப்பு பிரிவோ ஒப்புக்கு பெயலர் பலகை கூட இல்லாமல் இயங்கி வருகின்றது. போதை பொருள் தடுப்பு பிரிவை பலப்படுத்தாமல், கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாது என்பது சாமானிய மக்களுக்கே தெரியும்.இது டி.ஜி.பி.,க்கு தெரியாதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினை பலப்படுத்தி,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க டி.ஜி.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும்.

