/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதார் மையத்தில் கூடுதல் கட்டணம் கலெக்டரிடம் இந்திய கம்யூ., முறையீடு

ADDED : மே 14, 2024 05:19 AM

புதுச்சேரி: ஆதார் பொது சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்திட வேண்டும் என இந்திய கம்யூ., சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து அளித்த மனுவில்,
மாணவர்கள் சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் பொது சேவை மையத்தில் விண்ணப்பம் செய்பவரிடம் கட்டணமாக ரூ.35 பெற வேண்டும் என அரசு கட்ட ணம் நிர்ணயித்துள்ளது.
இதனை பின்பற்றாமல் ஆதார் பொது சேவை மையத்தில் 300 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடித்து வருகின்றனர்.
இதனை ஆய்வு செய்து கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது தொகுதி செயலாளர் தென்னரசன், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், தொகுதி பொருளாளர் தனஞ்செழியன், கிளைச் செயலாளர்கள் கருணாகரன், செந்தில், தியாகு உடனிருந்தனர்.