/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு சட்டக் கல்லுாரியில் வரும் 1ம் தேதி விண்ணப்ப வினியோகம் துவக்கம்

ADDED : ஜூன் 29, 2024 06:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காலாப்பட்டில், அம்பேத்கர் அரசு சட்டசக்கல்லுாரி உள்ளது. அந்த கல்லுாரியில், 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் ஜூலை1ம் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வினியோகிக்கப்படுகிறது.
5 ஆண்டு சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை சென்டாக்மூலமாக நடக்கிறது.
மூன்று ஆண்டு சட்ட படிப்பு, முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சட்டக்கல்லுாரி மூலம் நடைபெற உள்ளது. மேலும், மதகடிபட்டில் இயங்கி வரும் மணக்குள விநாயகர் சட்ட பள்ளியில், மூன்று ஆண்டு படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் தேர்வும் நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூலை 24ம் தேதி ஆகும். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம், பொது பிரிவினருக்கு, ரூ. 1,000 மற்றும் புதுச்சேரியை சேர்ந்தஎஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ. 500 ஆகும்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களையும் அரசு சட்ட கல்லுாரியில் சமர்ப்பிக்கலாம்.