நகை மதிப்பீடு தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
நகை மதிப்பீடு தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 06, 2026 11:43 PM
புதுச்சேரி: நகை மதிப்பீடு அதன் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய மேலாண் இயக்குநர் வீர வெங்கடேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் நீண்ட கால மற்றும் குறுகியகால பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்தி வருகிறது. நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
14 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் 6,500 ரூபாயும், தேர்வு கட்டணம் 500 ரூபாய் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சி முடித்தவர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகை கடைகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது. விண்ணப்பங்கள் பெற புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் விபரங்களுக்கு 0413 2220105, 2331408 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
