தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளியில் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி துவக்கம்

ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளியில் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி துவக்கம்

ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளியில் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி துவக்கம்


ADDED : ஆக 06, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் இஸ்ரோ நடத்தும் தேசிய விண்வெளி தின கண்காட்சி மற்றும் போட்டிகள் 2026 நேற்று துவங்கியது.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம், ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி ஆகியன இணைந்து இரண்டு நாள் ‘தேசிய விண்வெளி தினம் – 2026’ விழாவை கொண்டாடின.

துவக்க விழாவில் இஸ்ரோவின் குழு இயக்குநர் முரளிதரன் வரவேற்றார். ஆதித்யா நிறுவனர் ஆனந்தன் உலகளாவிய விண்வெளி ஆய்வில் இஸ்ரோவின் முக்கிய பங்கு குறித்தும், அடுத்த தலைமுறை ஆர்வமுள்ள விஞ்ஞானிகளுக்கு கணினி தொழில்நுட்பம் மற்றும் விமானப் போக்குவரத்து அறிவியலின் ஒருங்கிணைப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், இதற்கு மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இஸ்ரோவின் மையத்தில் உள்ள ‘மூன்றாவது ஏவுதளம்’ திட்டத்தின் இயக்குநர் சீனிவாச ராவ், விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னிலை நிலையை வெளிப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உதயசங்கர் கண்காட்சியை துவக்கி வைத்து, நவீன வாழ்வில் செயற்கை கோள்களின் தவிர்க்க முடியாத பங்கு குறித்து பேசினார். 

கண்காட்சியில் ‘சக்கரங்களில் விண்வெளி’ எனும் அதிநவீன நடமாடும் கண்காட்சி பஸ் இடம்பெற்றது. இஸ்ரோவின் புகழ்பெற்ற ஏவு வாகனங்களின் மாதிரிகள் மற்றும் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல் நாள் முழுதும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பார்வையாளர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடியனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us