தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 25, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள், இணையம் வழியாகவோ https://awards.gov.in அல்லது நேரிடையாகவோ அடுத்த மாதம் 31ம் வரை பெறப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், மக்கள் தொடர்பு, குடிமைப்பணி, வர்தகம் மற்றும் தொழில், ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுக்கு விண்ணப்பதாரர் தன்னிச்சையாகவோ அல்லது நிறுவனமோ பரிந்துரை செய்யலாம். இவ்விருதினை குறித்த முழு விவரங்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் https://wcd.py.gov.in அல்லது https://awards.gov.in என்ற இணைய முகவரியை பார்வையிடவும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us