தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமுதாய கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு 

சமுதாய கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு 

சமுதாய கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு 


ADDED : ஜூலை 12, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் 2026–27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

இக்கல்லுாரியில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட பல்வேறு பட்ட படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  குறிப்பாக பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., பையோ கெமிஸ்ட்ரி, பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் உள்ளன. இவை தவிர, உயிரியல் அறிவியல் சார்ந்த பல்வேறு பாரமெடிக்கல் படிப்புகளும் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன், யோகா குறித்த முதுகலை பட்டயம், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆவணங்கள் எழுதுதல் தொடர்பான பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கு தற்போது விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://pucc.edu.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினருக்கு ரூ.200-ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சேர்க்கை குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்கள் கல்லூரி இணையதளத்தின் வாயிலாகத் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம் என, பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us