அப்போலோ இருதய சிகிச்சை நிபுணர் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ இருதய சிகிச்சை நிபுணர் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
ADDED : ஜூலை 12, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர் வரும் 18ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, எண் 162 பாயின்ட்கார் தெருவில் இயங்கி வரும் கே.எம்.ஹர்ட் பவுண்டேஷன் (ஐ.எம்.இ.டி., மருத்துவமனை பிரிவு) இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர் சல்குணன், வரும் 18ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மாரடைப்பு, ரத்தகொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருதய அறுவை சிகிச்சை, இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளார். காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 94426 86168, 63811 56914 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
