ADDED : ஜூலை 12, 2026 11:42 PM
புதுச்சேரி: மனைவியை மிரட்டிய கணவன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, லெபர்துனால் வீதியை சேர்ந்தவர், மெர்லின் கொர்வெல். இவருக்கு பத்மநாபன் என்பவருடன் திருமணமாகி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர் தனது, வீட்டின் கீழ் பகுதியில் வசிப்பதுடன், மாடி பகுதியை கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு விடுதி நடத்த வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி இரவு பத்மநாபன், மெர்லின் கொர்வெல் வீட்டிற்கு வந்து தகறாறு செய்து மிரட்டியுள்ளார். பின் மாடியில் உள்ள விடுதி அறைகளின் பூட்டை உடைத்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்குமாறு புதுச்சேரி நீதிமன்றத்தில் மெர்லின் கொர்வெல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு பதியுமாறு ஒதியஞ்சாலை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பத்மநாபன் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
