/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
துணை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 15, 2024 11:47 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, துணை தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுகளுக்கு தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று 16ம் தேதி முதல் வரும் ஜூன் 1ம் தேதி, வரை குறிப்பிட்ட மையங்களுக்கு சென்று இணையதளம் மூலம், விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி தோல்வியடைந்த தேர்வர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, வீதம் தேர்வுக்கட்டணம் மற்றும் இதரக்கட்டணமாக, ரூ.35, செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணம், ரூ.70.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வினை முதன் முறையாக எழுத உள்ள தேர்வர்களின், தேர்வுக்கட்டணம் ரூ.185. மேலும், 10ம் வகுப்பிற்கான தேர்வுக்கட்டணம், ரூ.125.
தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணத்தை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். ஜூன் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில், விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம், வரும் ஜூன் 3, 4ம் தேதி இரு நாட்களில், தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு, ரூ.1,000 மற்றும் 10ம் வகுப்பிற்கு ரூ.500, சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில், தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விரிவான தகவல்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.