/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 22, 2024 04:36 AM
புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள, பெண்களை பாதுகாப்பதில் , ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 60 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான தகுதி, விதி முறைகள், நிபந்தனைகள் ஆகிய விபரங்களை அரசு இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 6 உறுப்பினர்களில் தலா ஒருவர் பட்டியல் , பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் துறை இயக்குனர் அலுவலகத்தில் அனுப்ப வேண்டும். இவ்வாறு துறையின் இயக்குனர் முத்து மீனா தனது செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.