/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 01, 2025 04:08 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகம் மூலம், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கு டெய்லரிங், கை எம்ராய்டரி, மிஷின் எம்ராய்டரி, ஆரி ஒர்க் ஆகிய தொழில் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி, இம்மாதம் துவங்க உள்ளது.
மாணவிகளுக்கு பயிற்சி கட்டணத்தில் சலுகை, குறைந்த கட்டணம், கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு இல்லை. பயிற்சி முடித்த பின் ஆலோசனை வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 0413- 2963157, 9486939931, 9994042592 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.