தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., பூத் பொறுப்பாளர்கள் நியமனம்

என்.ஆர்.காங்., பூத் பொறுப்பாளர்கள் நியமனம்

என்.ஆர்.காங்., பூத் பொறுப்பாளர்கள் நியமனம்


ADDED : செப் 23, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலையொட்டி, என்.ஆர்.காங்., பூத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் அறிக்கை; தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், என்.ஆர்.காங்., தலைவர் முதல்வர் ரங்கசாமியின் ஒப்புதலோடு, பூத் கமிட்டி பொறுபாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மோகன் நகர், திலகர் நகர், நவசக்சி நகர், குண்டுபாளையம், கவுண்டர்பாளையம், வி.வி.பி., நகர் பகுதிகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், அழகானந்தம், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடிக்கு ஆறுமுகம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாகூர் நகர், பாக்கமுடையான்பட்டு அமைச்சர் சிவக்கொழுந்து, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., அவ்வை நகர், முத்துலிங்கம் பேட், ராஜாஜி நகர் பகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தியாகராஜன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயின்ட்பால் பேட், புதுப்பேட்டை, கொட்டுப்பாளையம் பகுதிக்கு முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆகியோரும், மகாத்மா நகர், மேட்டுமா நகர், எல்லையம்மன் நகர், லட்சுமி நகர், சின்னையன்பேட், வேலவன் நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு மோகன்தாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் நியமிக்கப்பட்டனர்.

அன்னை தெரசா நகர், வினோபா நகர், பொய்யாக்குளம், முல்லை நகர், தமிழ் அன்னை நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர் பகுதிக்கு அமைச்சர் ராஜவேலு, நாராயணசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் பூத் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்பொறுப்பாளர்கள் இடைத்தேர்தல் களப்பணியினை மேற்கோள்ள வேண்டும். மாநில, மாவட்ட தொகுதி மற்றும் மாநில அணி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அவரவர் விருப்பப்பட்ட மேற்சொன்ன பூத் பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us