ADDED : மார் 24, 2024 04:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆலன் நிறுவனத்தில் பயின்று சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, சங்கமித்ரா மையத்தில் நடந்தது.
இதில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஆலன் நிறுவனத்தில் படித்து நீட், ஜே.இ.இ., தகுதி தேர்வில் சாதித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆலன் தெற்கு மண்டல தலைவர்கள் மகேஷ்யாதவ், சவுரப் திவாரி, சந்தோஷ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலன் மைய தலைவர் சவுரப் திவாரி கூறுகையில், 'புதுச்சேரி ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்டில் நீட் யூ.ஜி., ஐ.ஐ.டி., ஜே.இ.இ., ஒலிம்பியாட் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எங்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்கு 72 மாணவர்களும், மருத்துவம் பயில்வதற்கு 508 மாணவர்களும் தேர்வாகியுள்ளனர்.
மேலும் 107 மாணவர்கள் ஜிப்மரில் மருத்துவம் பயின்று வருகின்றனர்' என்றார்.தொடர்ந்து பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

