ADDED : மே 13, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி மகாலட்சுமி 571 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரியதர்ஷினி 559 இரண்டாமிடமும், மாணவி ஜெயப்பிரியா 541 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி யமுனா 485 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி அமிதாபனிகிறயி 478 பெற்று இரண்டாமிடமும், மாணவி அனுஷ்கா 469 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.