ADDED : மே 15, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியளவில் மாணவி ஆர்த்தி 480 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஹரிதாஸ்ரீ 468 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி தர்ஷினி 465 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். கணிதத்தில் மாணவி கோபிகா 100க்கு 100 பெற்றுள்ளார்.
பள்ளியில் சாதித்த மாணவர்களை பள்ளி துணை முதல்வர் சிவக்குமார், தலைமையாசிரியர் வசந்தி ஆகியோர் பாராட்டினர்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

