ADDED : ஜூன் 01, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் பிரேமாவுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் துணை முதல்வர் சிவராம ரெட்டி தலைமை தாங்கி, பணி ஒய்வு பெற்ற விரிவுரையாளர் பிரேமாவுக்கு நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர் ஜனார்த்தனன் வரவேற்றார்.
பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்தி பேசினர். விரிவுரையாளர் பிரேமா ஏற்புரை வழங்கினார். விலங்கியல் விரிவுரையாளர் பிரேம வாதா நன்றி கூறினார்.
உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார்.
