/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்சசீலா பல்கலையில் மாணவர்களுக்கு பாராட்டு
/
தட்சசீலா பல்கலையில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 19, 2024 05:26 AM

புதுச்சேரி : தட்சசீலா பல்கலையில் வேலை வாய்ப்பு பெற்ற, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்களை, பல்கலை வேந்தர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
புதுச்சேரி, மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி யில் இயங்கும் ஸ்கூல் ஆப் அலைட் ெஹல்த் சயின்ஸ் பயிலும் 6 மாணவர்களுக்கு, திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலையில், வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை தட்சசீலா பல்கலை வேந்தர் தனசேகரன், இணை வேந்தர் நிலா பிரியதர்ஷினி, துணைவேந்தர் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில், டீன் ஜெயஸ்ரீ, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாஜலபதி, ஸ்கூல் ஆப் ெஹல்த் அலைட் சயின்ஸ் டீன் ரம்யா ஆகியோர் பாராட்டினர்.

