/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழின் பெருமையை பறைசாற்றியவர் கம்பன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு
/
தமிழின் பெருமையை பறைசாற்றியவர் கம்பன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு
தமிழின் பெருமையை பறைசாற்றியவர் கம்பன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு
தமிழின் பெருமையை பறைசாற்றியவர் கம்பன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு
ADDED : மே 11, 2024 04:57 AM
புதுச்சேரி: கம்பனுக்கு முன்னால், எந்த கவிஞனும் தமிழின் பெருமையை, தமிழ்நாட்டின் பெருமையை, இந்தளவிற்கு, பெயர் சொல்லி பறைசாற்றியதில்லை என, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
கம்பன் விழாவில் அவர் பேசியதாவது:
இந்த உலகத்தில் எத்தனையோ கம்பன் கழகங்கள் இருந்தாலும், புதுச்சேரி கம்பன் கழகத்திற்கு இருக்கும் பெருமை, வேறு எதற்கும் கிடையாது.
ஏனென்றால், ஜனநாயகத்தின் மூன்று துாண்களாகிய, சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும், கம்பனுக்கு விழா எடுக்கிற, ஒரே இடம் புதுச்சேரி தான்.
புதுச்சேரி கம்பன் மீது ஏன் இவ்வளவு காதல் கொண்டது என நீங்கள் வரலாற்று ரீதியாக பார்த்தால், ஒரு ஆச்சரிய செய்தி தெரியும். புதுச்சேரி வரலாற்றில், கி.பி.325.,ல் இருந்து கி.பி.900 வரை இங்கு பல்லவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
கி.பி.900 முதல் கி.பி.1279 வரை, சோழர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்கின்றனர். கம்பன், ராம காதையை அரங்கேற்றியது, கி.பி.889.,ல், தான்.
அவர் ராமகாதை அரங்கேற்றம் செய்த பின், புதுச்சேரியில், சோழர்கள் ஆட்சி, கி.பி.900,ல், அரங்கேற்றம் பெறுகிறது.
அதனால், புதுச்சேரி மண்ணிற்கும் கம்பனுக்கும் தொடர்பு இருக்கிறதோ என நினைத்து பார்ப்பேன்.
கம்பனுக்கு, இந்த காலத்தில் பெருமை சேர்த்தவர்கள், பாரதி மற்றும் வா.வே.சு. ஐயர் ஆகிய இருவர் தான். கம்பனை போற்றிய இந்த இருவருரையும் போற்றி பாதுகாத்தது புதுச்சேரி மண்.
தமிழ் மொழி, இறைவனால் கொடுக்கப்பட்ட மொழி என்பதை கம்பன் பதிவு செய்கிறான்.
அவனுக்கு முன்னால், எந்த கவிஞனும் தமிழின் பெருமையை, தமிழ்நாட்டின் பெருமையை, இந்தளவிற்கு, பெயர் சொல்லி பறைசாற்றியதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.