/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய தர வரிசை பட்டியலில் இடம் கல்லுாரி முதல்வருக்கு பாராட்டு
/
தேசிய தர வரிசை பட்டியலில் இடம் கல்லுாரி முதல்வருக்கு பாராட்டு
தேசிய தர வரிசை பட்டியலில் இடம் கல்லுாரி முதல்வருக்கு பாராட்டு
தேசிய தர வரிசை பட்டியலில் இடம் கல்லுாரி முதல்வருக்கு பாராட்டு
ADDED : ஆக 22, 2024 12:43 AM

புதுச்சேரி : தேசிய தரவரிசை பட்டியல் மற்றும் அகில இந்திய அளவில் விருது பெற்ற மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவ நிறுவனம், அகில இந்திய அளவில் சிறந்த பல் மருத்துவ கல்லுாரிக்கான பியரி பவுச்சர் அகாடமி விருது பெற்றுள்ளது.
மேலும் தேசிய என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில் முதல் முறையாக விண்ணப்பித்து, அகில இந்திய அளவில் விண்ணப்பித்த 184 கல்லுாரிகளில் 35வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கல்லுாரி பெற்ற விருது மற்றும் தரவரிசை பட்டியல் இடம்பிடித்த சான்றிதழுடன், கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, பல் மருத்துவ நிறுவனம் இனி வரும் கல்வி ஆண்டுகளில் தேசிய தரவரிசை பட்டியலில் மேலும் முன்னேற வேண்டும் என கேட்டு கொண்டார்.