/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளம்பர பேனர்கள் வைக்கத்தான் மின்கம்பங்களா? இ.சி.ஆரில் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் அட்டூழியம்
/
விளம்பர பேனர்கள் வைக்கத்தான் மின்கம்பங்களா? இ.சி.ஆரில் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் அட்டூழியம்
விளம்பர பேனர்கள் வைக்கத்தான் மின்கம்பங்களா? இ.சி.ஆரில் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் அட்டூழியம்
விளம்பர பேனர்கள் வைக்கத்தான் மின்கம்பங்களா? இ.சி.ஆரில் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் அட்டூழியம்
ADDED : மார் 10, 2025 06:17 AM

புதுச்சேரி: இ.சி.ஆரில் கல்யாணம், கடை திறப்பு கோஷ்டிகள் ஆபத்தான முறையில் பேனர்கள் வைத்து அட்டூழியம் செய்துள்ளனர். அரசு உத்தரவினை மதிக்காமல் சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுத்த அச்சகம், மின்சாரம் கொடுக்கும் கல்யாண மண்டபம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி சாலையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம், நகராட்சிகள் கடுமையாக எச்சரித்து வருகின்றன.
இந்த எச்சரிக்கையெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என, கல்யாண கோஷ்டிகள், கடை திறப்பு கோஷ்டிகள் புறப்பட்டுள்ளனர்.
இ.சி.ஆரில் சிவாஜி சிலை முதல் பாக்கமுடையான்பேட் வரை முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை வரவேற்று கண்டமேனிக்கு பேனர்களை வைத்துள்ளனர்.
அதுவும் மின்கம்பங்களை ஒவ்வொன்றாக தேடி பிடித்து கல்யாண விளம்பர பேனர்களையும், கடை திறப்பு பேனர்களையும் கட்டி வைத்துள்ளனர்.
கல்யாண கோஷ்டிகள் முன்னாள் முதல்வர் நாராய ணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் என வரிசையாக காங்., தலைவர்களை வரவேற்று பேனர்களை மின்கம்பங்களில் கட்டி வைத்திருக்க, மற்றொரு பக்கம் கடை திறப்பு கோஷ்டிகள் யூனிட்டி பார்க் என்ற பெயரில் மின்கம்பங்களில் பேனர்களை கட்டி வைத்துள்ளனர். எந்த பேனர்களிலும் நகராட்சியின் அனுமதி, அச்சகத்தின் பெயர் இல்லை.
வெளிச்சம் யாருக்கு
இ.சி.ஆரில் சாலையின் இருபுறமும் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் விளம்பர பேனர்களுக்கு முட்டுக் கொடுத்து கொண்டு இருப்பது வேதனையாக உள்ளது. இந்த விளம்பர பேனர்களில் தெரு விளக்கு வெளிச்சம் பட்டு பளீச்சென தெரிகிறது.
மின் துறை காசில், பொதுமக்களின் வரி பணத்தில் விளம்பர பேனர் களுக்கு கல்யாண கோஷ்டிகள், கடை திறப்பு கோஷ்டி கள் வெளிச்சத்தை தேடியுள்ளனர்.
தடுக்க வேண்டிய மின் துறையோ குறட்டைவிட்டு துாங்குகின்றது. தெரு விளக்கு வெளிச்சம் பொதுமக்களுக்கு வழிகாட்டவா அல்லது விளம்பர பேனர்களுக்கா என்பது சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது.
மீண்டும் அட்டூழியம்
கோர்ட் தலையிட்டதற்கு பிறகு புதுச்சேரியில் பேனர் வைப்பது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கல்யாண கோஷ்டிகள், கடை திறப்பு கோஷ்டிகள் தான் பேனர்கள் வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இவர்கள் தான் பேனர் கலாசாரத்தை மீண்டும் துளிர்விட செய்து வருகின்றனர்.
பல முறை கல்யாண கோஷ்டிகளுக்கும், கடை திறப்பு கோஷ்டிகளுக்கும் அறிவுரை சொல்லியாகிவிட்டது. அரசு உத்தரவினை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஆபத்தான முறையில் பேனர்கள் வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
எனவே, இந்த சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுத்த அச்சகம், மின்சாரம் கொடுக்கும் கல்யாண மண்டபத்திற்கு சீல் வைப்பதோடு, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறுப்பு தான் ஏற்படும்
சாலையில் பேனர்களை வைப்பது மக்கள் விரும்பவில்லை. பேனர் வைக்கும் அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு தான் உள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டுமா என்பதை அரசியல் கட்சி கள், அரசியல் கட்சி தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
இனியாவது, சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அழைப்பிதழ் கொடுக்கும் போதே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டேன் என்று அறிவித்துவிட வேண்டும்.
இல்லையெனில் மக்கள் அக்கட்சிகளை விரல் அழுத்தும்போது புறந்தள்ளி விடுவர்.