ADDED : மே 07, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் :
பாரில் மது குடித்து விட்டு, உரிமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி பொருட்களை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கொம்பாக்கம் சாலையில் தனியார் மது கடையுடன் பார் உள்ளது. கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்து அவருடன் சிலர் பாரில் நேற்று மது குடித்தனர். பார் கேஷியர் மது குடித்ததற்கு பணம் கேட்டார். அதில் ஆத்திரமடைந்த, முத்து மற்றும் அவருடன் இருந்தவர்கள், பாரில் வேலை செய்த ஊழியர்கள், உரிமையாளர் ஆகியோரை மிரட்டினர். பீர் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து, பார் உரிமையாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.