/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., - பா.ம.க., வினர் இடையே வாக்குவாதம்
/
பா.ஜ., - பா.ம.க., வினர் இடையே வாக்குவாதம்
ADDED : ஏப் 05, 2024 11:31 PM
அரியாங்குப்பம்: தேர்தல் பிரசார ஊர்வலத்தில் முந்திச் செல்வதில் பா.ஜ., - பா.ம.க., தொண்டர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
லோக்சபா தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தவளக்குப்பம் பகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில் நமச்சிவாயத்தை ஆதரித்து, முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது, பூரணாங்குப்பம் சந்திப்பில், வேட்பாளர் பிரசார வாகனத்தின் முன் செல்வதில் பா.ஜ., - பா.ம.க., கட்சி தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமதானப்படுத்தி அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

