/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
/
திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
ADDED : மே 30, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: திரவுபதி அம்மன் கோவிலில், அர்ஜூனன் தபசு விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று மதியம் அம்மனுக்கு அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் ஆனந்த், விஜயலட்சுமி உட்பட பலர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.