தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்: புதுச்சேரியில் துவங்கியது

ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்: புதுச்சேரியில் துவங்கியது

ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்: புதுச்சேரியில் துவங்கியது


UPDATED : ஆக 01, 2026 05:56 PM

ADDED : ஆக 01, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 05:56 PM ADDED : ஆக 01, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் துவங்கியது.

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு முகாம் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், (1ம் தேதி) துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார், திருவள்ளூர், ராணிபேட்டை, விழுப்புரம், திருப்பத்துார், கடலுார், சென்னை, கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 பகுதிகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் துவங்கிய ஆட்சேர்ப்பு முகாமில், பங்கேற்பதற்காக, ஜூலை31 நள்ளிரவு முதலே விண்ணப்பதாரர்கள் வரத் துவங்கினர். நேற்று அதிகாலை, முதலில், ஆயிரம் விண்ணப்பதார்ரகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், எடை அளவிடப்பட்டு, 1.6 கீ.மி., ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தகுதி பெற்றவர்களுக்கு ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கில் கண் பார்வை பரிசோதனை நடந்தது. தொடர்ந்து, பகுதி வாரியாக வரும் 10ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us